கோத்தகிரியில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய விளையாட்டுக் குழுவினர் பயிற்சி

கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆஸ்திரேலியா விளையாட்டுக் குழுவினர் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரு தினங்கள் பயிற்சி அளித்தனர்.

கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆஸ்திரேலியா விளையாட்டுக் குழுவினர் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரு தினங்கள் பயிற்சி அளித்தனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிச்மண்ட் டைகர் விளையாட்டு குழுவினர் இந்தப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனைக் கண்டறியும் முகாமை நடத்தினர். 
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  இந்திய வம்சாவளி விளையாட்டுப் பயிற்சியாளர் கார்த்திக் தலைமையில் விளையாட்டு, அறிவியல் நிபுணர்கள், திறன் கண்டறியும் குழுவினர் என 27 பேர் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
  நவீன தொழில்நுட்ப உதவியுடன் மாணவ, மாணவிகள் உடல் ரீதியாக விளையாட்டுக்குத் தகுதி உள்ளவர்களாக என்பதைக் கண்டறிய பல்வேறு சோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். 
இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர் முறையான பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக உருவாக வாய்ப்பு உள்ளது. 
ஆஸ்திரேலிய அரசு ஒத்துழைப்புடன் கால்பந்து அணியை உருவாக்க பயிற்சி அளிக்கப்படும் என பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com