பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம்

கோத்தகிரியில்  பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு   தீயணைப்பு,  மீட்புப் பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

கோத்தகிரியில்  பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு   தீயணைப்பு,  மீட்புப் பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில் ஆசிரியர் சரவணக்குமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுப்பிரமணி தலைமை வகித்தார். வட்டாட்சியர் ரவிக்குமார் சிறப்புரையாற்றினார். தீயணைப்பு வீரர்கள், தீத்தடுப்பு முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். தீயணைப்பு நிலைய பொறுப்பு அதிகாரி மோகன்,  காஜாமைதீன், கிருஷ்ணன்குட்டி, ஜெகதீஷ், பாலமுருகன், சரத்குமார், கார்த்திக் ஆகியோர் பேரிடர் குறைப்பு தொடர்பாக விளக்கம் அளித்தனர். இதில், ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com