சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு: வெறிச்சோடிய காட்டேரி பூங்கா

குன்னூர் காட்டேரி பூங்கா சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் காட்டேரி பூங்கா ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது. 

குன்னூர் காட்டேரி பூங்கா சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் காட்டேரி பூங்கா ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது. 
குன்னூர் காட்டேரி பூங்கா பசுமையுடன் காட்சியளித்தாலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. 
தற்போது மழையின் தாக்கம் குறைந்து, வெயிலும், மேகமூட்டமும் மாறி,மாறிக் காணப்படுகிறது. இந்நிலையில், குன்னூர் காட்டேரி பூங்கா, சிம்ஸ்பூங்கா உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் பசுமையாக மாறியுள்ளன. 
ஆனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்றி அவை வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதுகுறித்து பூங்கா நிர்வாகிகள் கூறுகையில், "பொதுவாக இரண்டாவது சீசனில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் 
நிலையில், மழையின் காரணமாக தற்போது கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. வரும் வாரங்களில் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com