எச்பிஎஃப் தொழிற்சாலை பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம்
By DIN | Published on : 12th September 2018 05:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உதகை அருகேயுள்ள எச்பிஎஃப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிலும் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு, பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளிலேயே தற்போது வெகுவாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக உதகை நகர் போன்ற பகுதிகளிலும் பகல் நேரங்களிலேயே காட்டெருமை, கருஞ்சிறுத்தை போன்றவற்றின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உதகை அருகே மூடப்பட்டுள்ள சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான எச்பிஎஃப் தொழிற்சாலைப் பகுதியில் ஏற்கெனவே பல்வேறு வன விலங்குகளின் நடமாட்டம் இருந்து வந்த நிலையில், தற்போது பகல் நேரங்களிலும் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து இப்பகுதி மக்களிடத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எச்பிஎஃப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.