கூடலூரில் விஷம் அருந்திய சிறுவன், சிறுமி கோவை அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை

கூடலூரில் விஷம் அருந்திய சிறுவன், சிறுமி இருவரும் உதகையில் இருந்து உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுதொடர்பான விவரம் வருமாறு:


கூடலூரில் விஷம் அருந்திய சிறுவன், சிறுமி இருவரும் உதகையில் இருந்து உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுதொடர்பான விவரம் வருமாறு:
கூடலூர், செருமுள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஆஷியா. இவரது கணவர் குல்முகமது. இவர்களது குழந்தைகள் தாஷிபா(11), தப்ரேஷ் (9).
கடந்த 5 ஆண்டுகளாக ஆஷியா தனது கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆஷியாவின் வீட்டிலிருந்து வாழை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்தை குழந்தைகள் தவறுதலாக எடுத்துக் குடித்து விட்டதாகக் கூறி அவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை காலையில் கொண்டு வரப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பபட்ட பின்னர் உயர் சிகிச்சைக்காக உதகை அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
உதகையிலும் கூடுதல் சிகிச்சையளிக்கப்பட்டு, இருவரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் விஷம் குடித்ததற்கான காரணம் இதுவரையிலும் தெரியவில்லை என்பதுடன், அவர்களுக்கு நினைவு திரும்பி, கண் விழித்துப் பேசினால்தான் இச்சம்பவத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com