டேன் டீ குயின் சோலை தொழிலாளர்கள் போராட்டம்

கோத்தகிரி, டேன் டீ குயின் சோலை தொழிலாளர்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோத்தகிரி, டேன் டீ குயின் சோலை தொழிலாளர்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி, குயின் சோலை டேன் டீ தொழிலாளர்கள் செப்டம்பர் 10ஆம் தேதி பறித்து வந்த பசுந்தேயிலை தரமில்லை என கூறி டேன் டீ நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது. மேலும், டேன் டீ நிர்வாகம் ரூ. 60 ஆயிரம் பிடித்தம் செய்வதாகவும் குயின் சோலை கள மேலாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த 120/105 டிவிஷனைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டு, அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதயைடுத்து, டேன் டீ பொது மேலாளர் விக்ரம் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் கருவெற்றிவேல் ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர்.
அப்போது, தொழிலாளர்கள் உள்பட யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என உறுதி கூறியதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com