தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

மாவட்ட கடன் திட்ட அறிக்கை: ரூ. 3,132 கோடி கடன் இலக்கு: விவசாயம், சார்புத் தொழில்களுக்கு முன்னுரிமை

நீலகிரி மாவட்டத்துக்கு 2019-2020ஆம் நிதியாண்டிற்கு    ரூ.3,132 கோடி கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Updated On :24 ஜனவரி 2019, 12:29 am IST

நீலகிரி மாவட்டத்துக்கு 2019-2020ஆம் நிதியாண்டிற்கு    ரூ.3,132 கோடி கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
வரும் நிதியாண்டிற்கான மாவட்ட கடன் திட்ட அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.  இதை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார் முன்னிலையில்  மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட, ரிசர்வ் வங்கியின் உதவிப் பொதுமேலாளர் சேதுராமன் பெற்றுக் கொண்டார். 
இதில், மாவட்டத்திற்கு முன்னுரிமைக் கடனாக ரூ.3.132 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ரூ. 2,250 கோடி,  சிறு,  குறு, நடுத்தரத் தொழில்களுக்கு ரூ. 421 கோடி, பிற முன்னுரிமைக் கடன்களுக்கு ரூ. 461 கோடி என  ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ. 2,838 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் நடப்பு ஆண்டில் கூடுதலாக ரூ. 295 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நபார்டு வங்கியின் மேலாளர் வசீகரன்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, அனைத்து வங்கிகளின் மேலாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.