Enable Javscript for better performance
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: குற்றச்சாட்டு பதிவு செய்வது திடீர் நிறுத்தம்: ஏப்ரல் 12ஆம் தேதிக்கு வ- Dinamani

சுடச்சுட

    

    கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: குற்றச்சாட்டு பதிவு செய்வது திடீர் நிறுத்தம்: ஏப்ரல் 12ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 11th April 2019 08:22 AM  |   அ+அ அ-   |    |  

    கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய  உத்தரவிட்ட நிலையில் திடீர்த் திருப்பமாக குற்றச்சாட்டு பதிவு செய்வது நிறுத்தப்பட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
    கொடநாடு எஸ்டேட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சயன், மனோஜ், தீபு, ஜம்ஷேர் அலி, சதீஷன், பிஜின் குட்டி, உதயன், சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகிய 10 பேர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்கள்  மீது வழக்கு தொடரப்பட்டது. உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.
     இந்நிலையில் உதகையில் உள்ள மாவட்ட  நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் புதன்கிழமை  நடைபெற்ற விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் ஆஜராகினர். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞர் நந்தகுமாரும், எதிர்த் தரப்பில் முன்னாள்அரசு வழக்குரைஞர் ஆனந்தனும் ஆஜராகினர். அதேபோல, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் தெரிந்த  பெண்  வழக்குரைஞர் ஜென்னத் அல் பர்தாஸ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரானார்.  
    இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. விசாரணை தொடங்கியதும், கொடநாடு சம்பவங்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளதாகவும், இதன் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட நீதிபதி வடமலை அறிவித்தார். 
    அப்போது குறுக்கிட்ட உதயன் மற்றும் ஜம்ஷேர் அலி ஆகியோர் தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி போடப்பட்டிருந்த மனு தங்களுக்கு தெரியாமலேயே விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், தங்களுக்காக இதுவரைஆஜராகி வந்த வழக்குரைஞர் சிவகுமார் இனிமேல் ஆஜராக மாட்டார் என்பது உதகை நீதிமன்றம் வந்த பின்னரே தங்களுக்குத் தெரிய வந்ததாகவும், தங்களது மனு விலக்கிக்கொள்ளப்பட்ட காரணத்தால் உடனடியாக சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதால் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூற தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
     இதையடுத்து குற்றச்சாட்டு பதிவு செய்வது நிறுத்தப்பட்டு, இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பில் வேறு ஒரு வழக்குரைஞரை வைத்து வழக்கை நடத்தலாம் என மாவட்ட நீதிபதி வடமலை அறிவித்தார். 
    இந்த திடீர்த் திருப்பத்தின் காரணமாக கொடநாடு விவகார வழக்கு மேலும் பரபரப்படைந்துள்ளது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp