சுடச்சுட

  

  கூடலூர் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ராமசாமி திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
  நீலகிரி தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி ராமசாமி திங்கள்கிழமை கூடலூர் வந்தர். அவருக்கு மேல் கூடலூர் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல்கூடலூர், நடுகூடலூர் பகுதியில் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.  
  வாகனப் பிரசாரத்தில் வியாபாரிகள், பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். பிறகு, காசிம்வயல், செம்பாலா, குடோன் பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்துவிட்டு பந்தலூர் சென்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai