வாக்கை வீணாக்காதீர்கள்! நீலகிரியில் தொடரும் தீவிரப் பிரசாரம்

நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என நீலகிரி மாவட்டத்தில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என நீலகிரி மாவட்டத்தில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு, ஐலேண்டு அறக்கட்டளை, ஜனநாயக மறுசீரமைப்புக்கான அமைப்பு, தேசிய தேர்தல் கண்காணிப்பகம்  உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர், உதகை பகுதிகளில் இதற்கான பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இப்பிரச்சாரத்தின்போது பறை இசை, நாட்டுப்புறப் பாடல்களுடன் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இப்பாடல்களின் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாவிட்டால் நோட்டாவுக்காவது வாக்களியுங்கள் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
இப்பிரசாரத்தில் முக்கிய அம்சமாக அரசியல் கட்சிகள் குழந்தைகளுக்கு முதலிடம் அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.  இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் மேற்கண்ட அமைப்புகளின் நிர்வாகிகள் அல்போன்ஸ்ராஜ்,  ஜான் திருநாவுக்கரசு, சுதர்சன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
குன்னூரிலும் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. "எல்லோரும் வாக்களிப்போம், எல்லாமே மாறிவிடும்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களில் ஒவ்வொரு தேர்தலிலும் 35 சதவீதத்தினர் வாக்களிப்பதில்லை என்று கூறப்பட்டுள்ளது.
கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கூடலூர்,  பந்தலூர், மசினகுடி, மாயாறு, சி ங்காரா, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில்,   உள்ளூரில் தீர்வு காணாத பிரச்னைகளுக்காக தேர்தலைப் புறக்கணிக்காமல், நோட்டாவுக்கு வாக்களித்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com