கூடலூரில் திமுக - அதிமுகவினரிடையே தள்ளுமுள்ளு
By DIN | Published On : 17th April 2019 08:35 AM | Last Updated : 17th April 2019 08:35 AM | அ+அ அ- |

கூடலூர் காவல் நிலைய வளாகத்தில் திமுக, அதிமுகவினரிடையே செவ்வாய்க்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூரிலுள்ள இந்திரா நகர் பகுதியில் அதிமுகவினர் வாக்குக்கு பணம் கொடுப்பதாக திமுகவினருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து திமுகவினர் போலீஸாருடன் அங்கு சென்று பணம் வைத்திருந்த காரை சுற்றி வளைத்தனர்.
பின்னர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு இருதரப்பினரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது திமுக - அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர். காரை சோதனையிட்டதில் காரில் பணம் இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...