Enable Javscript for better performance
நீலகிரி மக்களவைத் தொகுதியில் 13.66 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    நீலகிரி மக்களவைத் தொகுதியில் 13.66 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க ஏற்பாடு

    By DIN  |   Published on : 18th April 2019 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் 13 லட்சத்து 65,608 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
    இவர்களில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 65,337 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 202 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 69 பேரும் உள்ளனர். 
    நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 1,301 வாக்காளர்கள் உள்ளனர். 
    கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 82,296 வாக்காளர்கள், குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 86,316 வாக்காளர்கள் உள்ளனர். 
    கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 லட்சத்து 80,943  வாக்காளர்கள், திருப்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 2 லட்சத்து 65,967 வாக்காளர்கள், ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 லட்சத்து 48,745 வாக்காளர்கள் உள்ளனர்.  
    நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 5 லட்சத்து 69,913  வாக்காளர்கள்  உள்ளனர்.  சமவெளிப் பகுதிகளிலுள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 7 லட்சத்து 95,895 வாக்காளர்கள் உள்ளனர்.
    நீலகிரி மக்களவைத் தொகுதியைப் பொருத்த மட்டிலும்,  எம்.தியாகராஜன் (அதிமுக),  ஆ.ராசா (திமுக),  எம்.ராமசாமி (அமமுக),  ராஜேந்திரன் (மநீம ), அசோக்குமார் (பகுஜன் சமாஜ் கட்சி), சுயேச்சை  வேட்பாளர்கள் ஆறுமுகம், சுப்பிரமணி, நாகராஜன், ராஜரத்தினம், ராஜா ஆகியோருடன் மொத்தம் 10 பேர் களத்தில் உள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai