நீலகிரி மக்களவைத் தொகுதியில் 13.66 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க ஏற்பாடு

தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் 13 லட்சத்து 65,608 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் 13 லட்சத்து 65,608 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
இவர்களில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 65,337 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 202 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 69 பேரும் உள்ளனர். 
நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 1,301 வாக்காளர்கள் உள்ளனர். 
கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 82,296 வாக்காளர்கள், குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 86,316 வாக்காளர்கள் உள்ளனர். 
கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 லட்சத்து 80,943  வாக்காளர்கள், திருப்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 2 லட்சத்து 65,967 வாக்காளர்கள், ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 லட்சத்து 48,745 வாக்காளர்கள் உள்ளனர்.  
நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 5 லட்சத்து 69,913  வாக்காளர்கள்  உள்ளனர்.  சமவெளிப் பகுதிகளிலுள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 7 லட்சத்து 95,895 வாக்காளர்கள் உள்ளனர்.
நீலகிரி மக்களவைத் தொகுதியைப் பொருத்த மட்டிலும்,  எம்.தியாகராஜன் (அதிமுக),  ஆ.ராசா (திமுக),  எம்.ராமசாமி (அமமுக),  ராஜேந்திரன் (மநீம ), அசோக்குமார் (பகுஜன் சமாஜ் கட்சி), சுயேச்சை  வேட்பாளர்கள் ஆறுமுகம், சுப்பிரமணி, நாகராஜன், ராஜரத்தினம், ராஜா ஆகியோருடன் மொத்தம் 10 பேர் களத்தில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com