அயல்நாட்டு காய்கறி விரிவாக்கத் திட்டம்: பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

நீலகிரி மாவட்டத்தில் அயல்நாட்டு காய்கறி விரிவாக்கத் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடையலாம் என தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் அயல்நாட்டு காய்கறி விரிவாக்கத் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடையலாம் என தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில்  உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் அயல்நாட்டு காய்கறிகளான புரூக்கோலி, ஐஸ்பெர்க், லெட்யூஸ்,  சிவப்பு முட்டைக்கோஸ், செலரி, லீக்ஸ்,  சைனீஸ் முட்டைகோஸ் போன்றவை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அயல்நாட்டு காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வைகயில்  ஒருங்கிணைந்த தோட்டக் கலை வளர்ச்சித் திட்டத்தின்கீழ்  நடப்பு ஆண்டில் சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவில் அயல்நாட்டு காய்கறி பரப்பு  விரிவாக்கத் திட்டம்  செயல்படுத்தப்படுகிறது.
 இத்திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். 
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
 அயல்நாட்டு காய்கறிகள் சாகுபடிசெய்யும் விவசாயிகள் தங்களது விண்ணப்ப படிவத்துடன்  உரிய ஆவணங்களான  புகைப்படம், சிட்டா, அடங்கல், அனுபோக சான்று, ஆதார் அட்டை  நகல்,  குடும்ப அட்டை நகல்,  வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்  ஆகியவற்றை இணைத்து  அந்தந்தப் பகுதிகளிலுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில்  பதிவு செய்து கொள்ள வேண்டும்.  
பதிவு செய்த விவசாயிகளின் நில ஆவணங்கள், தோட்டக் கலைத் துறை அதிகாரிகளால் கள ஆய்வு செய்யப்பட்ட பின்னர்  ஒரு ஹெக்டேருக்கு 50 சத மானியத்தில்  நாற்றுகளுக்கு ரூ.25,000, நாட்டு உரத்துக்கு ரூ.15,000 என மொத்தம்  ரூ.40,000 பின்னேற்பு மானியமாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.  
அத்துடன் ஒரு ஹெக்டேருக்கு ரூ.10,000 மதிப்பிலான இயற்கை வேளாண் இடுபொருள்களும் வழங்கப்படும்.  எனவே,  அயல்நாட்டு காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் உடனடியாக இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயனடையலாமென  தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com