கடினமாலா, உல்லத்தி, இத்தலார் ஊராட்சிகள் தேர்வு

தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்காக நீலகிரி மாவட்டத்தில் கடினமாலா, உல்லத்தி, இத்தலார்ஆகிய 3 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்காக நீலகிரி மாவட்டத்தில் கடினமாலா, உல்லத்தி, இத்தலார்ஆகிய 3 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் கடினமாலா,  உல்லத்தி, இத்தலார்ஆகிய 3 ஊராட்சிகளில் அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை செயல்படுத்தப்படவுள்ளது.  
இத்திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் நிரந்தரக் குடியிருப்பில் வசிக்கும் ஏழையினும், ஏழை குடும்பங்களை கிராம அளவிலான குழு கூட்டங்களின் மூலம் கண்டறியப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். 
இத்திட்டம் 18 முதல் 60 வயது வரையிலான நிலமற்ற மற்றும் கால்நடைகள் ஏதும் வைத்திராத ஏழைகளுக்கு செயல்படுத்தப்படும். 
 பயனாளிகள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்கள் மத்திய அல்லது மாநில அரசுப் பணியில் இல்லாதவராக இருக்க வேண்டும் என்பதோடு, இத்திட்டத்தில் ஏற்கெனவே பயன் பெறாத பயனாளியாகவும் இருத்தல் வேண்டும். ஆதரவற்ற  பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளி பெண்கள்,  திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனாளிகள் இரண்டு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் மூலம் தேர்வு செய்யப்படுவதோடு, தாழ்த்தப்பட்டோருக்கு 29 சதவீதமும், பழங்குடியினருக்கு 1 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படும். 
எனவே, கடினமாலா, உல்லத்தி, இத்தலார் ஆகிய  ஊராட்சிகளில் ஆகஸ்ட் 5 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் 
தவறாமல் பங்கேற்று இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com