குன்னூரில் களைகட்டியது: மருத்துவ குணமிக்க சீமை கொய்யா சீசன்

குன்னூரில் சீமை கொய்யா சீசன் களை கட்டி உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

குன்னூரில் சீமை கொய்யா சீசன் களை கட்டி உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலவி வரும் காலநிலை அரிய வகை பழங்கள் விளைய ஏற்றதாகும். வனங்களில் தவிட்டுப் பழம், ஊசிக்கலா, அத்தி, குரங்கு பழம் , நகா ஆகியவற்றுடன் பிளம்ஸ், பேரி, பெர்சிமென், ரம்புட்டான், துரியன், உதகை  ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் விளைகின்றன.
அதில் "சைடியம் கோவா' என்ற தாவர இனத்தில், "மிர்டேசியே' எனும் தாவரவியல் பெயரை கொண்ட சீமை கொய்யா பழம் விளைகிறது. இந்தப் பழத்தின் விதை புளிப்பு இனிப்பு கலந்த சுவை கொண்டவை. 10 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய இந்த மரத்தில் புதர்கள் போன்று இலைகள் படர்ந்து இருக்கும். 
இதன் சீசன் ஜூன் முதல் செப்டம்பர் வரை ஆகும். இந்தப் பழம் குன்னூர் சிம்ஸ் பூங்கா, வண்டிச்சோலை, காட்டேரி, கிளண்டேல், அருவங்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் வளர்ந்துள்ளன.
வயிற்றுப் போக்கை நிறுத்துவது, இதய நோய்களை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தீர்வு காணும் மருத்துவ குணங்களில் இந்தப் பழத்தில் நிறைந்துள்ளது என்பதால் சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்கின்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com