சுடச்சுட

  

  குன்னூரில்  வறண்டு கிடந்த ரேலியா அணைக்கு மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
  குன்னூர் நகராட்சிக்கு உள்பட்ட 30 வார்டுகளுக்கு குடிநீர் ஆதாரமான ரேலியா அணை கடந்த மாதம் வறண்டது. இதனால் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 
  மற்ற பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், குன்னூர் பகுதியில் மழை குறைவாகவே இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் சில நாள்கள் மட்டுமே பெய்த மழையில், ரேலியா அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 
  43.6 அடி உயரம் கொண்ட ரேலியா அணையில் தற்போது 34 அடி உயரத்துக்கு நீர் உள்ளது.
   இன்னும் சில நாள்கள் மழை பெய்யும் பட்சத்தில், அணை முழுக் கொள்ளளவை எட்டும் வாய்ப்புள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai