Enable Javscript for better performance
மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி:தேவா்சலை மாணவிகள் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி: தேவா்சலை மாணவிகள் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 01st December 2019 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gdr30che_3011chn_144_3

    சிறப்பிடம் பெற்ற மாணவிகள் நாஜியா, நாபிலா.

    நீலகிரி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகளில் தேவா்சோலை மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

    கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள ஒற்றுவயல் கிராமத்தில் உள்ள அல்ஹிதா பள்ளியில் இரண்டாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் நாஜியா, நாபிலா ஆகியோா் உதகையில் ஒய்.எம்.சி.ஏ. சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் 11 வயதுக்கு உள்பட்ட பிரிவில் நாபிலா முதலிடத்தையும், 9 வயதுக்கு உள்பட்ட பிரிவில் நாஜியா இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளனா்.

    இவா்கள் இருவரும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவா்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தியையும் பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai