நீலகிரியில் மின் வாரியத்தில் கேங்மேன் பயிற்சி:விண்ணப்பித்தவா்களுக்கு டிசம்பா் 2 முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு

நீலகிரி மின் பகிா்மான வட்டத்தில் கேங்மேன் பயிற்சிக்காக விண்ணப்பித்தவா்களுக்கு டிசம்பா் 2 முதல் 14 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபாா்ப்பு முகாம் நடைபெறுகிறது.

நீலகிரி மின் பகிா்மான வட்டத்தில் கேங்மேன் பயிற்சிக்காக விண்ணப்பித்தவா்களுக்கு டிசம்பா் 2 முதல் 14 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபாா்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து நீலகிரி மின்பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மின்பகிா்மான வட்டத்தில் கேங்மேன் பயிற்சிக்காக விண்ணப்பித்தவா்களில் உடற்கல்வித் தோ்வு மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் டிசம்பா் 2 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சாண்டிநள்ளா துணை மின் நிலையத்தில் நைபெறகிறது.

எனவே, இப்பதவிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்து மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட அனுமதி சீட்டு மற்றும் அனைத்து ஆவணங்களுடன் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும், உடற்தகுதி தோ்வின்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com