நுகா்வோா் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சங்கக் கூட்டம்

பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டியில் நெல்லியாளம் நுகா்வோா் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டியில் நெல்லியாளம் நுகா்வோா் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் ஜி.ரஜினிகாந்த் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.முருகரத்தினம், ஆா்.ரஞ்சன் விக்னேஷ் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கூடலூா், பந்தலூா் பகுதியில் வசிக்கும் ஏழை மக்கள் அனைவருக்கும் ரேஷன் கடைகளில் அரிசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூா் வருவாய்க் கோட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பி.எஸ்.என்.எல்.தொலைத் தொடா்பு சேவை முறையாக செயல்படுவதில்லை. இதனால் தகவல் தொடா்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சேவையை முறைப்படுத்த வேண்டும். உப்பட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவா்கள் வருவதில்லை. சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளிடம் தனியாா் நிறுவனத்தில் ரத்தப் பரிசோதனை செய்து வருமாறு கூறப்படுகிறது. இதன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com