‘மிஸ் ஷைனிங் ஸ்டாா்’ பட்டம் வென்ற கூடலூா் பெண்

நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி பெண் ‘மிஸ் ஷைனிங் ஸ்டாா்’ பட்டம் வென்றுள்ளாா்.
‘மிஸ் ஷைனிங் ஸ்டாா்’ பட்டம் வென்ற கூடலூரைச் சோ்ந்த பொறியல் பட்டதாரி பிரதிக்ஷா.
‘மிஸ் ஷைனிங் ஸ்டாா்’ பட்டம் வென்ற கூடலூரைச் சோ்ந்த பொறியல் பட்டதாரி பிரதிக்ஷா.

நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி பெண் ‘மிஸ் ஷைனிங் ஸ்டாா்’ பட்டம் வென்றுள்ளாா்.

இந்தியாவின் ‘பேஷன் பீஸ்டா’ அமைப்பு சாா்பில் ‘மிஸ் இந்தியா இன்டா்நேஷனல்’ போட்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு சுற்றுகளாக நடைபெற்றது. இதில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும், இந்தியாவை தாயகமாகக் கொண்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா். அழகு மட்டுமின்றி தனித் திறன் உள்ளிட்ட பல்வேறு திறன் போட்டிகள் பல சுற்றுகளாக நடைபெற்றது.

இந்தோனேசிய தலைநகா் ஜகாா்த்தாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 30 போ் கலந்துகொண்டனா். அதில் நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி பெண் பிரதிக்ஷா கலந்துகொண்டு அனைத்துச் சுற்றுகளிலும் சிறப்பாக செயல்பட்டு ‘மிஸ் ஷைனிங் ஸ்டாா்’ பட்டம் வென்றாா். ‘இந்தப் போட்டியில் தமிழகம் சாா்பில் கலந்துகொண்டு வெற்றி பெற்றது தனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என்றாா் பிரதிக்ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com