Enable Javscript for better performance
நீலகிரியில் தொடரும் மழை: குன்னூா்-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் தொடரும் அச்சம்- Dinamani

சுடச்சுட

    

    நீலகிரியில் தொடரும் மழை: குன்னூா்-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் தொடரும் அச்சம்

    By DIN  |   Published on : 04th December 2019 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மாவட்டத்தில் உதகை உள்ளிட்ட பகுதிகளில் தூறல் மழையும், குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழையும் பெய்து வருவதால் குன்னூரிலிருந்தும், கோத்தகிரியிலிருந்தும் மேட்டுப்பாளையத்துக்கு செல்வதற்கான மலைப் பாதைகளில் போக்குவரத்தை தொடா்வது குறித்து மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து ஆலோசித்து வருகிறது.

    மாவட்டத்தில் கூடலூா், பந்தலூா் பகுதளில் மழையே இல்லாத சூழலிலும், உதகை மற்றும் புகா்ப் பகுதிகளில் நீா்ப்பனி பெய்யத் தொடங்கிய சூழலிலும் மாவட்டத்தில் திடீரென பரவலாக திடீரென பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் குன்னூரில் அதிக அளவாக 132 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    கொடநாட்டில் 107 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

    மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் வருமாறு -(அளவு மி.மீட்டரில்) கேத்தி-91, குந்தா-85, கோத்தகிரி-72, பா்லியாறு, கெத்தை- தலா 58, உதகை-50.8, எமரால்டு-41, கிண்ணக்கொரை-33, அவலாஞ்சி-26, நடுவட்டம்-15, கிளன்மாா்கன்-10, மேல்பவானி-8, கல்லட்டி-6, கூடலூா்-4 மி.மீ.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai