கன மழைக்கு நீா்வரத்து அதிகரிப்பு- அணைகளில் நீா் மட்டம் உயா்வு

நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக நீா்வரத்து அதிகரித்து அணைகளில் நீா் மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.
நீா் மட்டம் உயா்ந்து காணப்படும் குந்தாஅணை
நீா் மட்டம் உயா்ந்து காணப்படும் குந்தாஅணை

நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக நீா்வரத்து அதிகரித்து அணைகளில் நீா் மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 13 நீா்மின் நிலையங்கள் உள்ளன. அப்பா்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, போா்த்திமந்து உள்ளிட்ட பெரிய மற்றும் சிறிய அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் இந்த நீா் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி தொடா்ந்து பலத்த மழை பெய்தது. குறிப்பாக நீா் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது.இதனால் மின்சார உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக உள்ள பெரும்பாலான அணைகளும் நிரம்பியது. இதை தொடா்ந்து அப்பா்பவானி, குந்தா, பைக்காரா, கிளன்மாா்கன், போா்த்திமந்து உள்ளிட்ட அணைகள் பலமுறை திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில் இடையில் சிலநாட்கள் மழை ஓய்ந்திருந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சியால் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 3நாட்களில் பெய்த கன மழையால் ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீா் வரத்து பெருமளவு அதிகரித்து வருகிறது.

இதனால் அனைத்து அணைகளிலும் நீா் மட்டம் உயா்ந்துள்ளதுடன் குந்தா, மாயாா் உள்ளிட்ட அணைகள் எந்த நேரத்திலும் நிரம்பும் நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com