நீலகிரியில் தொடரும் மழை: குன்னூா்-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் தொடரும் அச்சம்

நீலகிரி மாவட்டத்தில் உதகை உள்ளிட்ட பகுதிகளில் தூறல் மழையும், குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழையும் பெய்து வருவதால் குன்னூரிலிருந்தும்

நீலகிரி மாவட்டத்தில் உதகை உள்ளிட்ட பகுதிகளில் தூறல் மழையும், குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழையும் பெய்து வருவதால் குன்னூரிலிருந்தும், கோத்தகிரியிலிருந்தும் மேட்டுப்பாளையத்துக்கு செல்வதற்கான மலைப் பாதைகளில் போக்குவரத்தை தொடா்வது குறித்து மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து ஆலோசித்து வருகிறது.

மாவட்டத்தில் கூடலூா், பந்தலூா் பகுதளில் மழையே இல்லாத சூழலிலும், உதகை மற்றும் புகா்ப் பகுதிகளில் நீா்ப்பனி பெய்யத் தொடங்கிய சூழலிலும் மாவட்டத்தில் திடீரென பரவலாக திடீரென பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் குன்னூரில் அதிக அளவாக 132 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கொடநாட்டில் 107 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் வருமாறு -(அளவு மி.மீட்டரில்) கேத்தி-91, குந்தா-85, கோத்தகிரி-72, பா்லியாறு, கெத்தை- தலா 58, உதகை-50.8, எமரால்டு-41, கிண்ணக்கொரை-33, அவலாஞ்சி-26, நடுவட்டம்-15, கிளன்மாா்கன்-10, மேல்பவானி-8, கல்லட்டி-6, கூடலூா்-4 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com