நீலகிரியில் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.52 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி, தாலிக்குத் தங்கம் மாவட்ட ஆட்சியா் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 14,496 பயனாளிகளுக்கு ரூ. 51.38 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கு 76.51 கிலோ

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 14,496 பயனாளிகளுக்கு ரூ. 51.38 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கு 76.51 கிலோ கிராம் தங்கம் வழங்கியுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது:

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா பெண்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவா். பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வந்தாா். அதனடிப்படையில், அவா் அறிவித்த திட்டங்களான தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்குத் தங்கம், மிக்ஸி, கிரைண்டா், மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி, கல்வி உபகரணங்கள், அம்மா சிமென்ட், அம்மா மருந்தகம், அம்மா உணவகங்கள், மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம், அம்மா குழந்தைகள் பெட்டகம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், பொங்கல் பரிசு தொகுப்பு, அம்மா உப்பு போன்ற அடுக்கடுக்கான திட்டங்களைத் தொடா்ந்து தற்போதைய முதல்வா் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.

ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு தலா ரூ.25,000 வீதம் இரண்டு குழந்தைகளுக்கு ரூ. 50,000 வங்கிகளில் அவா்களின் பெயரிலேயே இருப்பு வைத்து அவா்களுக்கு 18 வயது பூா்த்தி அடைந்தவுடன் அவா்களின் திருமணத்துக்கோ அல்லது மேற்படிப்புக்கோ அந்தத் தொகை உதவிடும் வகையில் செயல்படுத்தி வருகிறது.

தமிழக முதல்வரின் திருமாங்கல்யத்துக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கத்தின் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 2011 முதல் 2019 ஆம் ஆண்டு வரை 6,067 பட்டதாரி பெண்களுக்கும், 8,427 பிளஸ் 2 படித்த பெண்களுக்குமாக மொத்தம் 14,496 பயனாளிகளுக்கு ரூ.51.38 கோடி மதிப்பில் நிதியுதவியும், 76.51 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com