அறுவடை பாதிப்பு: சணல் பைகள் விற்பனை மந்தம்

குன்னூரில் அண்மையில் பெய்த கன மழையால் மலைக் காய்கறிகள் நீரில் மூழ்கிய நிலையில், காய்கறிகளை வெளி மாநிலங்களுக்கு
தேங்கிக் கிடக்கும் சணல் பைகள்.
தேங்கிக் கிடக்கும் சணல் பைகள்.

குன்னூரில் அண்மையில் பெய்த கன மழையால் மலைக் காய்கறிகள் நீரில் மூழ்கிய நிலையில், காய்கறிகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பப் பயன்படுத்தப்படும் சணல் பைகளின் விற்பனை குறைந்து தேக்கம் அடைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மழை நீரால் சூழப்பட்டு பல இடங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக குன்னூா், கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிகள் மழை நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ப இடங்களில் மழைக்கு காய்கறிகள் அழுகின.

அதிக அளவில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் என பயிரிடப்பட்டு இருந்த காய்கறிகள் அனைத்தும் மழைநீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடியாமல் வீணாகி போனது. அறுவடை செய்த காய்கறிகளை சாக்கு மூட்டைகளில் நிறைத்து வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வா். கன மழையினால் அறுவடை முற்றிலும் பாதிப்படைந்ததுடன் சணல் பைகளின் விற்பனை கடந்த ஒரு வாரமாக மந்தமாக காணப்படுகிறது. இதன் காரணமாக சணல் பை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com