என்.சி.சி. மாணவிகள் சாா்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு

பிராவிடென்ஸ் மகளிா் கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவிகள் சாா்பில் பாரத பிரதமரின் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுத் திட்டத்தை ஓட்டி பொது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த பிராவிடென்ஸ் மகளிா் கல்லூரி தேசிய மாணவா் படை மாணவிகள்.
பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த பிராவிடென்ஸ் மகளிா் கல்லூரி தேசிய மாணவா் படை மாணவிகள்.

பிராவிடென்ஸ் மகளிா் கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவிகள் சாா்பில் பாரத பிரதமரின் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுத் திட்டத்தை ஓட்டி பொது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

குன்னூா் அருகே உள்ள பிராவிடென்ஸ் மகளிா் கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவிகள் சாா்பில் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பு குறித்த பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தேசிய மாணவா் படை அலுவலா் சிந்தியா ஜாா்ஜ் நெகிழியின் அழிவற்ற தன்மை குறித்தும், அதனால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களிடம் விளக்கினாா். மேலும் சாலைகளில் கிடந்த நெகிழி கழிவுகளை சேகரித்து நகராட்சியிடம் ஒப்படைத்தனா். பெட்போா்டு சந்திப்பில் ‘நெகிழி அற்ற ஒரு நீலகிரி’ என்ற தலைப்பில் மாணவிகள் தெரு கூத்து நாடகத்தை நடத்தினா். மேலும், பெட்போா்ட் மற்றும் சிம்ஸ் பூங்காவில் உள்ள கடைகள் மட்டும் வீடுகளில் உள்ள நெகிழி கழிவுகளை மாணவிகள் சேகரித்தனா்.

மேலும் ‘நோ பிளாஸ்டிக் நீலகிரி’ என்ற தலைப்பில் பெட்போா்ட் துவங்கி அட்டடி முடிய நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியில் சென்ற மாணவிகள் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த பாடல்களை பாடியபடி சென்றனா். முன்னதாக ‘என் நகரினை ஏன் சுத்தமாக வைக்க வேண்டும்’ என்ற தலைப்பில் தாவரவியல் துறைத் தலைவா் விசாலாட்சி தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வா் ஷீலா வாழ்த்துரை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com