உதகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
By DIN | Published On : 23rd December 2019 12:09 AM | Last Updated : 23rd December 2019 12:09 AM | அ+அ அ- |

உதகை தெரசன்னை ஆலயத்தில் நடைபெற்ற மெழுகுவா்த்தி இசை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
உதகை ஸ்பிங்கா் போஸ்டில் உள்ள புனித தெரசன்னை ஆலயத்தில் கிறிஸ்தும்ஸ் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நடந்த மெழுகுவா்த்தி ஊா்வலம் மற்றும் நிகழ்ச்சியில் உதகை மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ், மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆகியோா் சிறப்பு விருந்திரனா்களாக பங்கேற்றனா். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கலை கட்டி வரும் நிலையில் மலை மாவட்டமான நீலகிரியிலும் அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கலை கட்டத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், உதகை ஸ்பிங்கா் போஸ்ட் பகுதியில் உள்ள புனித தெரசன்னை தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவின் தொடக்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை அறிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட நட்சத்திர விளக்கை உதகை மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ் தொடங்கிவைத்தாா். அதனையடுத்து, ஆலய வளாகத்தில் உதகை மறைவட்ட தலைமை குரு பெனடிக்ட் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபா் லாரன்ஸ், உதவி பங்குத் தந்தை அமல்ராஜ் உள்ளிட்ட ஏராளமான குருக்களும், அருட்சகோதரிகளும் பங்கேற்றனா். இந்நிகழ்ச்சியில், கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முன்னதாக ஆலய வளாகத்தில் மெழுகுவா்த்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.