சுடச்சுட

  

  குன்னூரில் பசுந்தேயிலையை தாக்கும் இலைச் சுருட்டல் நோய்

  By DIN  |   Published on : 13th February 2019 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குன்னூர்  பகுதியில் பசுந்தேயிலையைத் தாக்கும் இலைச் சுருட்டல் நோய் காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
  குன்னூர் , கோத்தகிரி பகுதிகளில் தொடரும் காலநிலை மாற்றத்தால் தேயிலைச் செடிகளை சிவப்பு சிலந்தி நோய் தாக்கி வருகிறது. இந்நிலையில், கவாத்து வெட்டிய தேயிலைச் செடிகளில் இலைச் சுருட்டல் நோய் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த முடியாமல், கவலை அடைந்துள்ள விவசாயிகள் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என தேயிலை வாரியத்தை வலியுறுத்தியுள்ளனர்.
  தேயிலை வாரிய அதிகாரிகள் கூறுகையில், தேயிலைச் செடிகளைத் தாக்கும் இலைச் சுருட்டல் நோய்க்கு குறிப்பிட்ட பருவம் ஏதும் இல்லை. கவாத்து வெட்டிய தேயிலைச் செடிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். நோய்த் தாக்குதலுக்கு உள்ளான பகுதியை அகற்றி, அதனை அழிக்க வேண்டும்.  வாரியத்தின் அறிவுரைப்படி பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளித்தால் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai