நீலகிரியில் இறுதிக்கட்ட  ஊராட்சி சபை கூட்டங்கள்

மாவட்டத்தில்  இம்மாதம்14ஆம் தேதி முதல்  16ஆம் தேதி வரை இறுதிக் கட்டமாக மூன்று நாள்கள் ஊராட்சி சபைக் கூட்டங்கள்

மாவட்டத்தில்  இம்மாதம்14ஆம் தேதி முதல்  16ஆம் தேதி வரை இறுதிக் கட்டமாக மூன்று நாள்கள் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக  திமுக மாவட்ட செயலர் பா.மு.முபாரக் தெரிவித்துள்ளார்.
  இது தொடர்பாக அவர்  தெரிவித்துள்ளதாவது: 
   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நீலகிரி மாவட்டத்தில்  கடந்த ஜனவரி 9ஆம் தேதி  முதல் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திமுக கொள்கை பரப்புச் செயலரும்,  முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா  தலைமையில் வரும் 14ஆம் தேதி காலை 11 மணிக்கு  உதகை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட நஞ்சநாடு  பகுதியிலும்,  பகல் 12 மணிக்கு  இத்தலார் பகுதியிலும், பிற்பகல் 1 மணிக்கு  எமரால்டு பகுதியிலும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 
 அதேபோல, 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தொரையட்டி பகுதியிலும் பகல் 12 மணிக்கு எப்பநாடு கிராமத்திலும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. 
 மாவட்டத்தில் இதன் மாவட்ட நிறைவு நிகழ்ச்சி 16ஆம் தேதி தெங்குமரஹாடா கிராமத்தில் நடைபெறவுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com