கோத்தகிரி பகுதியில் எரியாத தெருவிளக்குகளால் மக்கள் அவதி

கோத்தகிரி கடைவீதி முதல் தேவாரம்  பகுதி வரை  தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள்  இருளில் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோத்தகிரி கடைவீதி முதல் தேவாரம்  பகுதி வரை  தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள்  இருளில் அவதிப்பட்டு வருகின்றனர்.
 கோத்திகிரி பேரூராட்சி 16ஆவது வார்டுக்கு உள்பட்ட கடைவீதி, தேவாரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  உள்ளன. கோத்தகிரி நகருக்கு வரும் மக்கள் இச்சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கன்னிகாதேவி காலனி, கிருஷ்ணாபுதூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் முக்கியப் பாதையாக அமைந்துள்ளது. இப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகள் அனைத்தும் எரிவதில்லை. சாலையின் இருபுறமும் காட்டுச் செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் கரடி உள்ளிட் ட வன விலங்குகளின் நடமாட்டமும் இப்பகுதியில் காணப்படுகிறது. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த இப்பகுதி வழியாக மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை உள்ளதால் இரவு நேரங்களில் மது அருந்துவோர் காலிப் பாட்டில்களை சாலையில் வீசி செல்வது  வடிக்கையாகவிட்டது.   எனவே, பழுதடைந்த தெருவிளக்குகளை செப்பனிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com