உதகை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம்
By DIN | Published On : 20th February 2019 07:43 AM | Last Updated : 20th February 2019 07:43 AM | அ+அ அ- |

உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டம் வாசகர் வட்டத் தலைவர் போ.மணிவண்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட மைய நூலகர் ஜோதிமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இக்கூட்டத்தில் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ள உலகப் புத்தக தினத்தை சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மணிவண்ணன் எழுதிய பெய்த நூல் என்ற புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட மைய நூலகர் சிவாஜி, வாசகர் வட்டப் பொருளாளர் சிறீமஞ்சு, கவிஞர்கள் சோலூர் கணேசன், ஜே.பி., நூலகர்கள் பாண்டியன், கணேசன், சுனிதா, எழுத்தாளர் கமலம் சின்னசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.