ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினர் அன்னதானம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.


குன்னூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
  நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர். அர்ஜுனன்  தலைமையில், மக்களவை உறுப்பினர் சி. கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது. ஏழை மக்களுக்கு  இலவச  வேட்டி சேலை , இனிப்பு வழங்கி அதிமுகவினர் கொண்டாடினர். நகரச் செயலாளர் டி.சரவணகுமார், கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com