முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 28th February 2019 08:28 AM | Last Updated : 28th February 2019 08:28 AM | அ+அ அ- |

பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அவசரத் தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் பழுதடைந்துள்ளதால் அருகில் உள்ள மருத்துவமனைகளிலிருந்து வாகனம் வரவழைக்கப்படுகிறது. இதனால் அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் வரதாமதமாகிறது. எனவே பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு தனியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கி இப்பகுதி மக்களின் அவசர மருத்துவத் தேவைக்கு உதவவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.