சுடச்சுட

  


  கூடலூர் பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் பங்கு ஈவுத் தொகையாக 366 பேருக்கு ரூ. 7 லட்சத்து 66 ஆயிரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. 
  நீலகிரி மாவட்டம், கூடலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள அங்கத்தினர்களுக்கு போனஸ் பங்கு ஈவுத் தொகையாக 366 பேருக்கு ரூ. 7 லட்சத்து 66 ஆயிரத்து 329 வழங்கப்பட்டது. அதிக அளவில் பால் உற்பத்தி செய்த கூடலூர், விமலகிரி பகுதியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர் சிவனுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க துணைத் தலைவர் அருள்நாதன், சங்க செயலாளர் கிருஷ்ணகுமார், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பால் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai