சுடச்சுட

  


  குன்னூரில் 70ஆவது ராணுவ தினத்தை ஒட்டி மாணவ, மாணவியருக்கான மினி மாரத்தான் போட்டி தங்கராஜ் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை த நடைபெற்றது.
  குன்னூரில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் சார்பில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், எதிர்காலத்தில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வம் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும், உடல் தகுதியைப் பேணிக் காப்பதன் மூலம் எதிர்கால சந்ததியினர் வளமுடன் வாழ வழிவகை செய்யும் வகையிலும் 5 கி.மீ. தொலைவுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 
  இதில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இதில் கொண்டவர்களுக்கு ராணுவ மருத்துவமனை கமாண்டண்ட் பங்கஜ் பி.ராவ் சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai