தேயிலைத் தொழிற்சாலை அங்கத்தினர்களுக்கு இலை பறிக்கும் இயந்திரம்

பந்தலூரை அடுத்துள்ள எருமாடு பிராண்டியர் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை அங்கத்தினர்களுக்கு குறைந்த

பந்தலூரை அடுத்துள்ள எருமாடு பிராண்டியர் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை அங்கத்தினர்களுக்கு குறைந்த விலையில் தேயிலை பறிக்கும் இயந்திரங்கள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தொழில் பிரதான தொழிலாகவும்,  மாவட்ட வருவாயின் முதுகெலும்பாகவும் விளங்குவதால் தேயிலைத் தொழிலை பாதுகாக்க இன்கோ சர்வ் நிர்வாகம் புதிய யுக்திகளைக் கையாண்டு வருகிறது. தேயிலை மேம்பாட்டுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனம், தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க தேயிலை பறிக்கும் இயந்திரங்களை வாங்கி அங்கத்தினர்களுக்கு வழங்கி வருகிறது. 
குன்னூர் இன்கோ சர்வ் நிர்வாக இயக்குநர் டாக்டர் வினீத் உத்தரவின்பேரில், இணை இயக்குநர் (பொ) வழிகாட்டுதலின்பேரில் குறைந்த விலையில் இயந்திரங்களை கொள்முதல் செய்து அங்கத்தினர்களுக்கு வழங்கி பயிற்சியளித்து வருகிறது தொழிற்சாலை நிர்வாகம். பிராண்டியர் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவர் ராஜன் வர்கீஸ், துணைத் தலைவர் முகமது, மேலாண்மை இயக்குநர் அருட்செல்வன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தினர்கள் கலந்துகொண்டனர். தேயிலை பறிக்கும் பயிற்சியை கள விளக்க அலுவலர் மணிகண்டகுமார் அளித்தார்.  கூட்டத்தில் ஏராளமான சிறு விவசாயிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com