ஊருக்குள் புகுந்து அட்டகாசம்:  கூண்டில் சிக்கியது பெண் புலி

கூடலூரை அடுத்துள்ள வயநாடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அட்டகாசம் செய்து வந்த பெண் புலி செவ்வாய்க்கிழமை இரவு கூண்டில் சிக்கியது.

கூடலூரை அடுத்துள்ள வயநாடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அட்டகாசம் செய்து வந்த பெண் புலி செவ்வாய்க்கிழமை இரவு கூண்டில் சிக்கியது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், நூல்புழா பஞ்சாயத்தில் உள்ள தேக்கமலை, மூலங்காவு, நாய்க்கட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள வளர்ப்புப் பிராணிகளைக் கொன்று பெண் புலி ஒன்று அட்டகாசம் செய்து வருவதாக வனத் துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர். 
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பாப்பச்சன், சுனில் ஆகியோரது கறவை மாடுகளை அந்தப் புலி திங்கள்கிழமை இரவு கொன்றது. இதனால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது.
இதையடுத்து அந்தப் புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறையினர் ஏற்பாடு செய்தனர். இதில் கூண்டில் வைத்திருந்த இறைச்சியை உண்ண வந்த புலி செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிக்கியது. சிக்கிய பெண் புலி சுமார் 12 வயது மதிக்கத்தக்கது. இந்தப் புலியின் வாயில் இரண்டு பற்கள் இல்லை. அதனால் வேகமாகச் சென்று பெரிய விலங்குகளை வேட்டையாட முடியாத காரணத்தால் ஊருக்குள் நுழைந்து வளர்ப்பு விலங்குகளைத் தாக்கிக் கொன்றுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.
இந்தப் புலியை உயிரியல் பூங்காவில் விடுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com