நீலகிரியில் இரண்டு நாள்களுக்கு உறைபனி

நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (ஜன.17, 18) ஆகிய இரண்டு

நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (ஜன.17, 18) ஆகிய இரண்டு நாள்களுக்கு உறை பனி நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: கடந்த நில நாள்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.     இதில், குறிப்பாக நீலகிரி மாவட்டம், கோவை மாவட்டம் வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளில் அவ்வப்போது உறை பனி நிலவி வருகிறது. 
இந்நிலையில், நீலகிரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஜனவரி 17,18- ஆகிய இரண்டு நாள்களுக்கு உறைபனி நிலவும். 
தமிழகம், புதுச்சேரியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 20) வரை வறண்ட வானிலை காணப்படும். புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டம், உதகையில் 3 டிகிரியும்,  குன்னூரில் 8 டிகிரியும் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மனி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com