குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் எதிர்ப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூர் கன்டோன்மென்ட் பள்ளியில் நிர்வாக காரணங்களுக்காக 400 மாணவ, மாணவிகள் வேறு

நீலகிரி மாவட்டம், குன்னூர் கன்டோன்மென்ட் பள்ளியில் நிர்வாக காரணங்களுக்காக 400 மாணவ, மாணவிகள் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  அவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
வெலிங்டன் கன்லிடோன்மென்ட் வாரிலியத்லிதுக்கு உள்லிபட்ட வெலிங்டன் தமிழ் வழி மற்றும் சின்ன வண்லிடிச் லிசோலிலையில் உள்ள சி.பி.எஸ்.இ. ஆங்லிகில வழிப் பள்லிளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணலிவிலியர் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்லிளிலிகளில் பயிலும் மாணவ, மாணலிவிலிகளைக் கிராலிமங்லிகளில் இருந்து அழைத்து வர, கடந்த சில ஆண்லிடுலிகலிளுக்கு முன்பு, கன்டோன்மெண்ட் சார்பில் இலலிவலிசலிமாக பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்காக தனிலியாலிருக்கு டெண்டர் விடப்லிபட்டு 13 வாகலினங்கள் இயக்லிகப்லிபட்லிடன. 
இந்த நிலையில், தற்போதுள்ள இந்த 3 பள்ளிகளையும் ஒரே பள்ளியாக மாற்ற கன்டோன்மென்ட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால் நடப்பு ஆண்டில் 400 மாணவ, மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
இதனால் அச்சமடைந்த பெற்றோர் நூற்றுக்கும் மேற்பட்டோர்   கன்டோன்மென்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள்,  கன்டோன்மென்ட் நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மாவிடம் குழந்தைகளை திடீரென்று  வேறு பள்ளிக்கு மாற்றம் செய்வதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும் என முறையிட்டனர். 
மேலும்,  மாணவ, மாணவிகளைத்  தொடர்ந்து அதே பள்ளியில் படிக்க அனுமதி கோ ரி அதிகாரியிடம் மனு அளித்தனர்.  
மனுவை பெற்றுக்கொண்ட  கன்டோண்மென்ட் நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா,   கண்டோன்மென்ட்  குழுவிடம் கலந்து ஆலோசனை செய்து இந்த மாத இறுதிக்குள்  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.  இதனால் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com