சுடச்சுட

    

    குன்னூர் லாம்ஸ்ராக் காட்சிமுனைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

    By DIN  |   Published on : 28th January 2019 10:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kunnur


    குன்னூர் லாம்ஸ்ராக் காட்சிமுனையில் இயற்கை காட்சிகள் வசீகரிப்பதால் இதனைக் கண்டு ரசிக்க வெள்ளிக் கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர். 

    குன்னூர் லாம்ஸ்ராக் காட்சிமுனையில் இருந்து பர்லியார், மேட்டுப்பாளையம், பகாசுரன்மலை உள்பட சுற்றுப்புற பகுதிகளின் இயற்கை காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது. மேகமூட்டம் இருக்கும் காலங்களில் இங்கிருந்து பெரும்பாலான இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியாமல் இருந்தது.

    தற்போது பனிப் பொழிவு அதிகரித்துள்ளதால் இதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நீல வானத்துடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. இதனால் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai