காய்கறிகளை சேமித்து வைக்க குளிர்சாதன குடோன் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

உதகையில் காய்கறிகளை சேமித்து வைக்கும் வகையில் குளிர்சாதன குடோன் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. 


உதகையில் காய்கறிகளை சேமித்து வைக்கும் வகையில் குளிர்சாதன குடோன் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. 
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அண்மையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2017-2018, 2018-2019ஆம் ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டில் 3200 விவசாயிகளைக் கொண்டு 32 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டு பண்ணைய திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் உள்ளடக்கிய குழுக்களுக்கு இயற்கை வேளாண்மை செய்ய ஊக்குவிக்கப்படும் என்று கூறியிருந்தார். 
மேலும், விளை பொருள்களைப் பத்திரப்படுத்த உதகை ரோஜா பூங்கா பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலம் 500 டன் கொள்ளளவில் காய்கறிகளை சேமித்து வைக்கும் வகையில் குளிர் சாதன குடோன் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகக் கூறியிருந்தார். இப் பணிகளை விரைந்து முடிந்து விவசாயிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com