சுடச்சுட

  

  தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்

  By DIN  |   Published on : 01st July 2019 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குன்னூர் அருகே உள்ள ஜெகதளா பேரூராட்சியில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
  ஜெகதளா கிராமத்தில் செயல் அலுவலர் மணிகண்டன் (பொறுப்பு) மேற்பார்வையில், இளநிலை உதவியாளர் ஜெகதீஷ், ஊழியர்கள் அங்குள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். 
  அதில், கடைகளில் பிளாஸ்டிக் அட்டை, கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பல கடைகளில் சோதனை நடத்தப்பட்டு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  மேலும் அவற்றை பயன்படுத்தியவர்களுக்கு ரூ. 3,500 அபராதம் விதிக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai