சுடச்சுட

  

  கட்டபெட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை

  By DIN  |   Published on : 02nd July 2019 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குன்னூர்-கோத்தகிரி சாலையில் கட்டபெட்டு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என  வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் 3 ஆவது முறையாக திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
  இது குறித்து ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கட்டபெட்டு பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடை பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இந்தஓஈ கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என பலமுறை  மனு கொடுத்திருந்தும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  இந்தக் கடையை நிரந்தரமாக மூடினால்தான் இப்பகுதி பொதுமக்களுக்கு நிம்மதியாக இருக்கும். இந்த மதுக்கடைக்கு வருவோர் அருகில் உள்ள கோயில் வாசலிலும், கோயில் படிக்கட்டுகளிலும் அமர்ந்து கொள்வதால் கோயிலுக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
  அதேபோல இங்குள்ள பேருந்து நிழற்குடையிலும் மது அருந்துவோர் அமர்ந்து கொள்வதால் பேருந்துக்காக காத்திருப்போர் வேறு வழியின்றி சாலையிலேயே நிற்க வேண்டி உள்ளது. 
  இப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாணவ, மாணவியர் நடந்து சென்று வருவதோடு, கட்டபெட்டு, நடுஹட்டி, பாரதி நகர்  உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நடந்து செல்வோரும் இந்த மதுக்கடை  வழியாகவே செல்ல வேண்டியிருப்பதால் எவ்வித பாதுகாப்புமில்லாத நிலையே உள்ளது.
  மேலும், இந்த மதுக்கடை பிரதான சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளதால் அதிக அளவில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. மேலும், மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை அருகே உள்ள விவசாய  நிலங்களிலும், தேயிலைத் தோட்டங்களுக்குள்ளும் வீசியெறிந்து விடுவதால் விவசாயத் தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
  எனவே, கட்டபெட்டு மதுக்கடையை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai