மாவட்ட காவல் கண்காணிப்பாளராக  சி.கலைச்செல்வன் பொறுப்பேற்பு

நீலகிரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சி.கலைச்செல்வன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

நீலகிரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சி.கலைச்செல்வன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
நீலகிரி மாவட்ட, காவல் கண்காணிப்பாளராக இருந்த சண்முகப்பிரியா, சென்னை சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டை துணைக் காவல் ஆணையராக இருந்த சி.கலைச்செல்வன், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் உதகையில் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:
நீலகிரி மாவட்டம், சுற்றுலா மாவட்ட என்பதால் மாவட்டத்தில் நிலவும் போக்குவரத்துப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும்,  நகரில் நிலவும் வாகன நெரிசல்களுக்கு தீர்வு காணவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல, நகரில் தற்போது பெரும்பாலான பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை மேலும் அதிகரித்து நகர் முழுவதும் கண்காணிக்கவும், அதன் மூலம் குற்றங்கள் குறைக்கவும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
அதேபோல, வனப் பகுதிகளையொட்டி உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மனித-விலங்கு மோதலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நீலகிரி மாவட்டம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியாக இருப்பதால் எல்லைப் பகுதிகளில் நிலவும் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க அடிக்கடி ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு தகவல்களும் கிடைக்கின்றன. அதேபோலவே,  பல்வேறு வதந்திகளும் எழுகின்றன. இதனை உரிய முறையில் கண்காணிக்கப்படும் என்றார். 
ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த இவர் 2017 ஆம் ஆண்டில் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில்  மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளராகவும், தொடர்ந்து சென்னையில் மாதவரம் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதிகளில் துணைக் காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com