தனியார் பஞ்சு கிடங்கில் தீ விபத்து
By DIN | Published On : 19th July 2019 09:04 AM | Last Updated : 19th July 2019 09:04 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தனியார் பஞ்சு கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
கோத்தகிரி, பஜார் மாரியம்மன் கோயில் பகுதியில் ஜாகீர் உசேன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு கிடங்கில் சுமார் 3 ஆயிரம் கிலோ இலவம் பஞ்சு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கிடங்கில் இருந்து வியாழக்கிழமை காலை திடீரென புகை மூட்டம் வந்தது. அங்கிருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பஞ்சு மூட்டைகளில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். குடியிருப்புகளுக்கு அருகில் ஏற்பட்ட இந்த தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.