பந்தலூரில் இளையோர் விழிப்புணர்வு முகாம்
By DIN | Published On : 19th July 2019 09:04 AM | Last Updated : 19th July 2019 09:04 AM | அ+அ அ- |

கூடலூர் அருகே உள்ள பந்தலூரில் இளையோர் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்திய இம்முகாமுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் செலின், மகாத்மா காந்தி பொது சேவை மையத் தலைவர் நெளஷாத், பந்தலூர் வருவாய் ஆய்வாளர் காமு, கிளை நூலகர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் வாசிப்புத் திறனை மேம்படுதத 150 மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.