Enable Javscript for better performance
கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு கன்டோண்மென்ட் ஊழியர்கள் ரத்த தானம்- Dinamani

சுடச்சுட

    

    கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு கன்டோண்மென்ட் ஊழியர்கள் ரத்த தானம்

    By DIN  |   Published on : 25th July 2019 09:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கார்கில் போர் நினைவு தினத்தை  முன்னிட்டு  குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரிய ஊழியர்கள் சார்பில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
    பாதுகாப்புத் துறை கட்டுபாட்டில் இயங்கி வரும் வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரியம் சார்பில், கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
    அதன் ஒரு பகுதியாக நூறுக்கும்  மேற்பட்ட கன்டோண்மென்ட் வாரிய அலுவலர்கள், ஊழியர்கள், வாரிய கவுன்சிலர்கள், துணைத் தலைவர் உள்ளிட்டோர் ரத்த தானம் செய்தனர்.
    இதில் வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி பூஜா.பி.பலிச்சா தலைமையில், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜி மென்ட் மையத்தின் தலைவர் பிரிகேடியர் பங்கஜ், முதன்மைப் பொறியாளர் சுரேஷ், துணைத் தலைவர் எம்.பாரதியார், சுகாதார மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai