Enable Javscript for better performance
குன்னூரில் பரவலாக மழை- Dinamani

சுடச்சுட

    

    குன்னூர் மற்றும்  அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில்  பலத்த மழை புதன்கிழமை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டது.
    நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த  தென்மேற்கு பருவ மழை கூடலூர் பகுதியில் அதிகமாக இருந்தது. எனினும், குன்னூர், கோத்தகிரி, கேத்தி, கொலக்கம்பை போன்ற   பகுதிகளில் மழை குறைந்தே காணப்பட்டது.  இருப்பினும் கடந்த சில நாள்களாக  குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது குளிர்க்காற்றுடன் மழையும் பெய்து வந்தது.    இந்நிலையில் மதியம் திடீரென பலத்த மழை பெய்யத் துவங்கியது. சில மணிநேரம் தொடர்ந்து பெய்த மழை காரணமாக ஆறுகள், சாலைகளில் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடியது. 
    இதன் காரணமாக பொதுமக்கள், வாகன  ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai