Enable Javscript for better performance
குன்னூர் அருகே குட்டிகளுடன் உலவிய கரடி- Dinamani

சுடச்சுட

    

    குன்னூர் அருகே வீட்டின் மிக அருகில் கரடிக் குட்டிகள் தாய்க் கரடிடன் புதன்கிழமை விளையாட்டியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில்  சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களிலும், இரவில் குடியிருப்புப் பகுதிகளிலும் கரடிகள் உலவுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 
    இந்நிலையில், குன்னூரிலிருந்து அளக்கரை அரவேணு செல்லும் சாலையில்  இரண்டு குட்டிகளுடன் தாய்க்கரடி ஒன்று தேயிலைத் தோட்டத்திலிருந்து வெளியேறி சாலையில் உலா வந்தது. அவற்றை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சத்துடன் படம் எடுத்தனர். இந்தக் கரடிகள் குடியிருப்புப் பகுதிக்கு  மிக அருகில் 30 நிமிடம் வரை உலவிய பின்னர் மீண்டும் தேயிலைத் தோட்டத்தினுள் சென்றுவிட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai